பேரளம் அருகே லாரி மோதி 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பலி

மோகன் மயிலாடுதுறையில் கார் பழுது நீக்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பேரளம் அருகே லாரி மோதி 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பலி
Published on

பேரளம்:

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள வரவூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 30). இவர் மயிலாடுதுறையில் கார் பழுது நீக்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை அவர் வரவூரிலிருந்து மோட்டார் சைக்கிளில் தனது மகன் நிரோஷன் (7) மகள் சியாஷினி (3) அழைத்து கொண்டு காரைக்கால் செல்லும் சாலையில் உள்ள கோவில் திருமாளம் என்கிற இடத்திற்கு பொருட்களை வாங்க வந்துள்ளார்.

பின்னர் பொருட்களை வாங்கி விட்டு கோவில்திருமாளத்தில் இருந்து வரவூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

அப்போது பேரளம் அருகே அகரதிருமாளம் என்கிற இடத்தில் சென்ற போது எதிரே வேகமாக வந்த லாரி வளைவில் கட்டுப்பாட்டை இருந்து மோகனின் மோட்டார் சைக்கிளிலில் மோதியது.

இதில் 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இது குறித்து தகவல் அறிந்ததும் பேரளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பேரளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com