

ஆவடி, ஓசூர், தாம்பரம், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை ஆகிய மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த மாநகராட்சிகளில் குப்பைகளை சேகரித்தல், குப்பையை கிடங்குகளுக்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.
இந்த நிலையில் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் "அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் பணி பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும். எந்தவித உரிமைகளும் பெற முடியாத சூழலில் பணியமர்த்துவது சமூக நீதிக் கொள்கைக்கு முரணானது. தூய்மை பணியில் ஈடுபடுபவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் தூய்மை பணியை தனியாரிடம் விடும் முடிவை திரும்பப் பெற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.