

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 17வது கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை தொடர்ந்து அடுத்ததாக தேசிய கீதம் பாடப்பட்டது.
17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது. வணக்கம் எனக்கூறி தமிழில் உரையை தொடங்கிய ஆளுநர் அர்லேகர் ஆங்கிலத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* டாஸ்மாக்கில் ஊழல் மூலம் திரட்டப்படும் நிதியை தடுத்து அரசு கஜானாவுக்கு திருப்பப்பட்டு உள்ளது.
* மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
* இந்த அரசு போதைப்பொருள் புழக்கத்தை ஒடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்.
* கடந்த ஆட்சி போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.
* கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து உள்ளது.
* நிதி பகிர்வில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு இழைக்கும் அநீதி குறித்து விரைவில் அறிக்கை வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.