தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் "விசில் புரட்சி"- ஆளுநர் அர்லேகர்

விஜயால் மட்டுமே தமிழகத்தை ஆள முடியும் என மக்கள் தீர்ப்பு என்றார் ஆளுநர் அர்லேகர்.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் "விசில் புரட்சி"- ஆளுநர் அர்லேகர்
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 17வது கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை தொடர்ந்து அடுத்ததாக தேசிய கீதம் பாடப்பட்டது.

17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது.

அதன்படி, பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர் வணக்கம் எனக்கூறி தமிழில் உரையை தொடங்கினார். தொடர்ந்து, ஆங்கிலத்தில் உரையாற்றி வருகிறார்.

ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள் என்ற அண்ணாவின் வார்த்தைகள் மற்றும் அம்பேத்கர் பெயர்களை குறிப்பிட்டு ஆளுநர் உரையாற்றினார். மக்களின் தேவைகளை சட்டசபையில் விவாதிப்பீர்கள் என நம்புகிறேன் எனவும் கூறினார்.

கொள்கை தலைவர்கள் பெயர்களை உச்சரிப்பதில் தவறு நேர்ந்திருந்தால் பிழை பொறுக்க வேண்டும் என்றார்.

சட்டப்பேரவையில் புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றியதாவது:-

மாற்றம் ஒன்றே மாறாதது என்ற வார்த்தைகள் தேர்தலின் மூலம் நிரூபணமாகி உள்ளது.

கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் மக்களின் பெரும் ஆதரவோடு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளது.

தமிழக வெற்றிக்கழகம் சாதி, மதம், இனம் என்று வேறுபாடுகளையும் பண பலத்தையும் மீறி வெற்றி பெற்று உள்ளது.

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் விசில் புரட்சி ஏற்பட்டுள்ளது. 1977-ம் ஆண்டில் எம்ஜிஆர் ஏற்படுத்திய அரசியல் புரட்சியை போல 2026-ம் ஆண்டில் விஜய் புரட்சியை ஏற்படுத்தி உள்ளார்.

தமிழகத்தில் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக த.வெ.க. அரசு ஆட்சியில் அதிகாரத்திலும் பங்கு அளித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை மற்றும் உட்கட்டமைப்புகளக்கு மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது. ஓசூர், கோவை, மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

மேகதாது அணையை கட்ட அனுமதிக்க கூடாது என பிரதமரை வலியுறுத்தி உள்ளார் விஜய்.

தமிழக மீனவர்களின் நலன் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் மோடியை சந்தித்த போது முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com