சிறை தண்டனை எதிரொலி... கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க மீனவர்கள் முடிவு

நாளை முதல் படகுகளில் கருப்பு கொடி கட்டி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை மீனவர்கள் தொடங்க உள்ளனர்.3 நாட்கள் பேரணியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
சிறை தண்டனை எதிரொலி... கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க மீனவர்கள் முடிவு
Published on

ராமேசுவரம்:

இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து காலவரையற்ற போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறை தண்டனை வழங்குவதை கண்டித்து நாளை முதல் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

நாளை முதல் படகுகளில் கருப்பு கொடி கட்டி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை மீனவர்கள் தொடங்க உள்ளனர்.

3 நாட்கள் பேரணியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர். வரும் 20-ந்தேதி மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி மீனவர்கள் பேரணியாக செல்ல உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com