நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் - காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து

விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.விஜய்யின் கருத்து இன்றைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் - காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து
Published on

நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இதையடுத்து, விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கே.எஸ்.அழகிரி மேலும் கூறியிருப்பதாவது:-

மக்களை பிளவுபடுத்தும் அரசியலுக்கு எதிராகவும் மக்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் சக்திகளுக்கு எதிராகவும் விஜய் கருத்து கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என அவர் வலியுறுத்தியிருப்பது, இன்றைய அரசியல் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com