நீராவி குளத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ரூ. 3 லட்சம் - மு.க. ஸ்டாலின்

தூத்துக்குடியில் குளத்தில் குளிக்க சென்ற குழந்தைகள் உயிரிழப்பு. உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு முதல்வர் ஆறுதல்.
நீராவி குளத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ரூ. 3 லட்சம் - மு.க. ஸ்டாலின்
Published on

தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி அருகே உள்ள நீராவி குளத்தில் மூழ்கி சந்தியா, கிருஷ்ணவேணி மற்றும் செல்வன் என மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர். குழந்தைகள் மூவரும் உறவினருடன் குளத்தில் குளிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இந்த நிலையில், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில், இந்த சம்பவத்தை கேட்டு வருத்தமும், வேதனையும் அடைந்ததாக தெரிவித்தார்.

மேலும், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கும் அவர்களது உறவினர்களுக்கு இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்த முதல்வர், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த தொகை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்த வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com