பள்ளிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு திட்டத்திற்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு - நிதி அமைச்சர்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்துகிறது.
Marie Wilson
Published on

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

* போதையில்லா தமிழ்நாடு செயலி உருவாக்கப்பட்டு தன்னார்வ குழுக்கள் அமைக்க ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* பள்ளிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்திற்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* Drugs Free தமிழ்நாடு செயலி மூலம் போதைப்பொருள் பரவல் குறித்து புகார் அளிக்கும் வகையில் சிறப்பு செயல்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

* அடுத்தாண்டு மதுரையில் அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்படும்.

* நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்துகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com