திமுக பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாசலம் விடுவிப்பு

அதிமுகவில் இருந்தபோது ஈரோடு மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்த முக்கிய பங்காற்றினார்.
Thoppu Venkadasalam
Published on

திமுகவின் ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாசலம் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட பெருந்துறை மற்றும் பவானி தொகுதிகள் முறையே ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களுடன் இணைக்கப்பட்டு அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் கீழ் நிர்வகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலம் அவர்களை, அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஈரோடு மத்திய மாவட்டத்திற்குரிய சட்டமன்ற தொகுதிகளான பெருந்துறை தொகுதி ஈரோடு தெற்கு மாவட்டத்திலும், பவானி தொகுதி ஈரோடு வடக்கு மாவட்டத்திலும் இணைக்கப்பட்டு அந்தந்த மாவட்ட கழகச் செயலாளர்கள் நிர்வகிப்பார்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக டூ திமுக

ஈரோட்டில் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம்.

அதிமுகவில் இருந்தபோது ஈரோடு மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்த முக்கிய பங்காற்றினார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, பெருந்துறை தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அமைச்சராகவும் பணியாற்றினார்.

இதனையடுத்து 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தோப்பு வெங்கடாச்சலத்திற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத காரணத்தால் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனையடுத்து 2021ஆம் ஆண்டு திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

காரணம் என்ன?

உட்கட்சி பூசல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தோப்பு வெங்கடாச்சலத்திற்கும் முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், கட்சி பணியில் ஈடுபடாமல் தோப்பு வெங்கடாச்சலம் ஒதுங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாச்சலம் நீக்கப்பட்டுள்ளார்.

தவெக-ல் இணைய முடிவு?

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தோப்பு வெங்கடாசலம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். அதனால், திமுகவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஆளுங்கட்சியான தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com