பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த திருமாவளவன்

திருமாவளவனுக்கு சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் வரவேற்பு வழங்கினார்.கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள சாலையோர வியாபாரிகள் சூழ்ந்துகொண்டனர்.
பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த திருமாவளவன்
Published on

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கட்சி நிகழ்ச்சிக்காக திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு வருகை தந்தார்.

அப்போது அவர் அங்குள்ள பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

இதைதொடர்ந்து, மலையடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்திற்கு சென்று தொட்டிச்சி அம்மன் மற்றும் புலிப்பாணி ஜீவசமாதியில் தரிசனம் மேற்கொண்டார்.

கோவிலுக்கு வருகை தந்த திருமாவளவனுக்கு சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் வரவேற்பு வழங்கினார். கோவிலை விட்டு வெளியே வந்த அவரை கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள சாலையோர வியாபாரிகள் சூழ்ந்துகொண்டனர்.

அவர்களின் குறைகளை திருமாவளவன் கேட்டறிந்தார். பொது மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com