த.வெ.க-வுக்கு கொள்கை, கோட்பாடு என எந்த கத்தரிக்காயும் கிடையாது- முத்தரசன்

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி மறைமுகமாக ஆட்சி நடத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சி ..
த.வெ.க-வுக்கு கொள்கை, கோட்பாடு என எந்த கத்தரிக்காயும் கிடையாது- முத்தரசன்
Published on

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் தேனியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

குழந்தை இப்போதுதான் பிறந்திருக்கிறது. வளரட்டும், வளர்ந்த பிறகு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். இப்போதே இந்த குழந்தை தேறுமா, தேறாதா? என்று சொல்ல முடியாது.

குழந்தைக்கு இன்னும் தொப்புள் கொடி கூட அறுக்கவில்லை. வளரட்டுமே, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

த.வெ.க.வுக்கு கொள்கை, கோட்பாடு என்று ஒரு கத்திரிக்காயும், ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது.

அந்தக் கட்சி 108 இடங்களில், 107 உறுப்பினர்கள் வெற்றி பெற்றார்கள். கிடைத்த இடம் 108, உறுப்பினர்கள் 107. ஆட்சி அமைப்பதற்கு சட்டமன்றத்தில் இருக்கிற கட்சிகளில் அந்தக் கட்சி தான் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்ற கட்சி என்பதால் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு அனுமதி கோரி கடிதம் கொடுத்தார்கள்.

கவர்னர் அமைச்சரவையை அமைப்பதற்கும் பெரும்பான்மையை குறிப்பிட்ட நாளுக்குள் நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும், ஆனால் அதை செய்யவில்லை.

எப்படி சசிகலா காலத்தில் காலத்தை நீடித்து, பிறகு நீதிமன்ற தீர்ப்பை விரைவுபடுத்தி சசிகலாவை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு வேற ஒரு ஆட்சி அமைத்தார்களோ, அந்த மாதிரியான ஒரு ஆட்சியே தமிழ்நாட்டில் அமையாமல் இருப்பதற்கும், அந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி மறைமுகமாக ஆட்சி நடத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மற்றும் சில கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்தன. அதற்கு மேல் அதில் ஒன்றும் கிடையாது.

இவ்வாறு முத்தரசன் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com