“இ.பி.எஸ்.க்கும், எங்களுக்கும் இருப்பது ஆரோக்கியமான மோதல்தான்” - எஸ்.பி.வேலுமணி!

திமுக எதிர்ப்பதுதான் எங்கள் முதல் நோக்கம்.
“இ.பி.எஸ்.க்கும், எங்களுக்கும் இருப்பது ஆரோக்கியமான மோதல்தான்” - எஸ்.பி.வேலுமணி!
Published on

கோவை தொண்டாமுத்தூரில் இன்று அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி.,

“எங்களைப் பொறுத்தவரையில் அதிமுக நன்றாக இருக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஜெயலலிதா இருந்தவரை ஒரு ஐந்து வருடம் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தால், அடுத்து ஆளும் கட்சியாக வரும். ஆனால், தற்போது ஏன் ஆளுங்கட்சியாக வரவில்லை என விவாதிக்க வேண்டும் என்பதற்காகவே பொதுக்குழு கூட்டச் சொல்லி கேட்டோம்.

எடப்பாடி பழனிசாமியும் கூட்டுவதாகத்தான் சொன்னார். அதேபோல தற்போது பிரச்னை வருவது ஏன்? திமுகவுடன் அதிமுக செல்லப்போகிறது என்றபோதுதான் பிரச்னை வந்தது. தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்ததற்கு எங்களை துரோகிகள் என்கிறார்கள். ஆனால், திமுக எதிர்ப்பின் காரணமாகவே தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தோம்.

அதன்பிறகு அதிமுக பொதுச் செயலாளருடன் சமாதானமாகிவிட்டோம். அதன்பிறகு கட்சி பொறுப்புகள் வழங்கியதில்தான் முரண்பட்டு இருக்கிறோம். மற்றப்படி எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. உரிமையோடு தலைமையுடன் போராடிக் கொண்டிருக்கிறோம். பொள்ளாச்சி ஜெயராமன் சில தவறான வேலைகளை செய்துவருகிறார்.

பொள்ளாச்சி ஜெயராமன் மகனுக்கு பிரச்சனை வரும்போது நான் தான் 25 ஆயிரம் பெண்களை அழைத்துச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினேன். நாங்கள் இப்போது திமுக எதிர்ப்பில் வலுவாக இருக்கிறோம். தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், திமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்றவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது?

நாங்கள் நியாயமாக இருக்கிறோம். வயது முதிர்வு இல்லாமல் தேவை இல்லாமல் செய்துக் கொண்டிருக்கிறார் பொள்ளாட்சி ஜெயராமன். அவர் தொடர்பான யாரும் எந்தப்பதிவும் போடாதீர்கள். இபிஎஸ்க்கும், எங்களுக்கும் ஆரோக்கியமான மோதல்தான் இருந்துவருகிறது. எல்லோருமே அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள்தான்.

எடப்பாடி முதலமைச்சராக வேண்டும் என நாங்கள் பணியாற்றினோம். இப்போதும் அவர்தான் பொதுச்செயலாளர்தான்.” என தெரிவித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com