

பாஜகவின் வேட்பாளர்கள் அறிவிப்புக்கு முன்னதாகவே, வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சாவூர் மாவட்ட துணைத் தலைவரை பாஜகவில் இருந்து நீக்கி, நயினார் நாகேந்திரன் நடவடிக்கை நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தினை சார்ந்த மாவட்ட துணைத் தலைவர் முரளீதரன் அவர்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும், கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும், அவர் வகித்து வந்த கட்சியின் பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கப்படுகிறார்.
ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.