சென்னை வியாசர்பாடியில் பயங்கர தீ விபத்து- 15 குடிசை வீடுகள் எரிந்து நாசம்

நான்கு தீயணைப்பு நிலைய தீயணைப்பு படை வீரர்கள் களத்தில் இறங்கினர்.நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படவில்லை.
சென்னை வியாசர்பாடியில் பயங்கர தீ விபத்து- 15 குடிசை வீடுகள் எரிந்து நாசம்
Published on

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியில் உள்ள குடிசை வீடுகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து தகவல் தெரிவித்த நிலையில், காவல்துறை தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நான்கு தீயணைப்பு நிலைய தீயணைப்பு படை வீரர்கள் களத்தில் இறங்கி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தால், 15-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com