பெரிய பெரிய லாபிகள் பல வழிகளில் எங்ககிட்ட பேச முயற்சி பண்ணாங்க: அமைச்சர் விக்னேஷ்

பெரிய பெரிய லாபிகள் என்ன செய்கிறார்கள் என்றால், எங்களை அப்ரோச் செய்ய முடியல. இப்போது எங்களுடைய இமேஜ ஏதாவது செய்யலாம் என்று நினைக்கிறார்கள்.
அமைச்சர் விக்னேஷ்
அமைச்சர் விக்னேஷ்
Published on

மது விலக்கும் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் இன்று கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த ஆட்சியில எனது துறைல ஊழல்கள் நடந்திருக்கு. நான் ஒரு விசயத்தை சொல்லனும்னு நினைத்தேன். இந்த துறையில் சில மாற்றங்கள் இல்ல, பல மாற்றங்கள் கொண்டு வருகிறோம். இதனால் 1000 கோடி ரூபாய்க்கு மேல் தொழில் செய்து கொண்டிருந்தவர்கள், அடிமட்டத்தில் உள்ள சில ஊழியர்கள் என பல பேர் பாதிக்கப்படுகிறார்கள்.

எவ்வளவோ வகையில், வழியில் என்னை அப்ரோச் செய்யவும், அணுகவும் முயற்சி செய்தாங்க. இது தமிழக வெற்றிக் கழத்தின் ஆட்சி. தமிழக முதல்வரோட ஆட்சி. இங்கு பணத்தால எந்த விசயமும் செய்ய முடியாது. பணம் கொடுக்கிறோம். எப்படியாவது இருக்கிற செட்டப்ப விடுங்க எனக் கூறுகிறார்கள். அதற்கு நாங்கள் வரல. மக்கள் மாற்றம் வேண்டும் என்று எங்களை தேர்வு செய்துள்ளனர். அதற்காக வந்திருக்கோம்.

பெரிய பெரிய லாபிகள்

பெரிய பெரிய லாபிகள் என்ன செய்கிறார்கள் என்றால், எங்களை அப்ரோச் செய்ய முடியல. இப்போது எங்களுடைய இமேஜ ஏதாவது செய்யலாம் என்று நினைக்கிறார்கள். மக்களுக்கு தெரியும். அவர்களால் இந்த மண்ணில் எதுவும் செய்ய முடியாது. மாற்றம் நடந்தே தீரும். டாஸ்மாக் மட்டும் கிடையாது. சுற்றுச்சூழல் துறையிலும் சரி மாற்றம் நடந்தே தீரும். அதனால் ஆபாசத்திற்கும், அவதூறுக்கும் பயபடுவோம் என்று நினைத்து விடாதீர்கள். அது பெரிய தோல்வியை கொடுக்கும்.

மதுபான பாட்டில்களில் மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு எனப் போடப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் உள்ள போர்டுகளில் இந்த வாசகம் இல்லை என்றால் போடப்படும்.

இவ்வாறு அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com