பாஜக அரசின் பிடிவாத போக்கால் தந்தை, மகன் பலி- வைகோ

தமிழக அரசின் நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு உடனடியாக மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். தேர்வில் ஏற்படும் தோல்விக்கு தற்கொலை தீர்வாகாது என மாணவர்களுக்கு அறிவுரை தெரிவித்துள்ளார்.
பாஜக அரசின் பிடிவாத போக்கால் தந்தை, மகன் பலி- வைகோ
Published on

சென்னை:

தமிழகத்தில் நீட் தோல்வி தற்கொலைகளுக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கல்வித்துறையில் மாநில உரிமைகளை பறித்துக் கொண்ட பாஜக அரசின் பிடிவாத போக்கால், தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக அரசின் நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு உடனடியாக மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள வைகோ, தேர்வில் ஏற்படும் தோல்விக்கு தற்கொலை தீர்வாகாது என மாணவர்களுக்கு அறிவுரை தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com