திருச்சியை 'கை' விடாது!- திருநாவுக்கரசர் நம்பிக்கை

வருகிற பாராளுமன்ற தேர்தலில் அந்த தொகுதியை தி.மு.க. விட்டுக்கொடுக்காது.திருச்சி தொகுதியில் போட்டியிட கட்சி எனக்கு வாய்ப்பு கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
திருச்சியை 'கை' விடாது!- திருநாவுக்கரசர் நம்பிக்கை
Published on

காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் அந்த தொகுதியை தி.மு.க. விட்டுக்கொடுக்காது.

தி.மு.க.வின் முக்கிய புள்ளி ஒருவரை அந்த தொகுதியில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதையடுத்து தொகுதியில் தேர்தல் பணிகளையும் தொடங்கிவிட்டதாக உடன்பிறப்புகள் உற்சாகமாக கூறுகிறார்கள்.

அப்படியானால் திருச்சி தொகுதி காங்கிரசிடம் இருந்து கை நழுவுகிறதா என்று திருநாவுக்கரசரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- "கடந்த முறை 4.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். தொகுதிப் பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டு வருகிறேன். தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை கடந்த முறை யார் யார், எங்கே போட்டியிட்டார்களோ... பெரும்பாலும் அதுவே இந்த முறையும் தொடர வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகவே திருச்சி தொகுதியில் போட்டியிட கட்சி எனக்கு வாய்ப்பு கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது!"

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com