அ.தி.மு.க.வுக்கும், ஓ.பி.எஸ்.சுக்கும் இடையே எந்த சம்பந்தமும் கிடையாது- ஆர். காமராஜ் பேட்டி

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று கடைக்கோடி தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவரும் ஏற்கனவே முடிவு செய்தனர். 24-ந் தேதி திருச்சியில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் மாநாடு நடத்த உள்ளதாக தகவல்கள் வருகிறது.
அ.தி.மு.க.வுக்கும், ஓ.பி.எஸ்.சுக்கும் இடையே எந்த சம்பந்தமும் கிடையாது- ஆர். காமராஜ் பேட்டி
Published on

தஞ்சாவூர்:

தஞ்சையில் இன்று அ.தி.மு.க சார்பில் அமைக்கப்பட்ட கோடைக்கால நீர், மோர் பந்தலை அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று கடைக்கோடி தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவரும் ஏற்கனவே முடிவு செய்தனர். கிட்டத்தட்ட நீதிமன்றமும் அதைத்தான் முடிவு செய்துள்ளது.

இந்த சூழ்நிலையில் 24-ந் தேதி திருச்சியில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் மாநாடு நடத்த உள்ளதாக தகவல்கள் வருகிறது. இதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. அ.தி.மு.க.வுக்கும், ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே எந்த சம்பந்தமும் கிடையாது.

அ.தி.மு.க, பா.ஜ.க இடையே கூட்டணி நல்ல முறையில் உள்ளது என்று எடப்பாடி பழனிசாமியே கூறிவிட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com