எஸ்.பி.வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

எஸ்.பி.வேலுமணி வீட்டில் இன்று சோதனையில் ஈடுபட்ட போலீசார் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்தனர்.
எஸ்பி வேலுமணி
எஸ்பி வேலுமணி
Published on

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீடு மற்றும் அவருடைய நண்பர்கள், உறவினர்கள் வீடு, அலுவலகம் என 58 இடங்களில் இன்று நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனை நடந்த நேரத்தில் எஸ்.பி. வேலுமணி, கோவை குனியமுத்தூரை அடுத்த சுகுணாபுரம் மைல்கல் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்தார்.

அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தாங்கள் சோதனை நடத்த வந்திருப்பதாக தெரிவித்தனர். அதற்கு எஸ்.பி. வேலுமணி எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. தாராளமாக சோதனை நடத்துங்கள் என போலீசாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் எஸ்.பி. வேலுமணி வீட்டில் அறை அறையாகச் சென்று சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் எஸ்.பி. வேலுமணியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் பல்வேறு கேள்விகளை எழுப்பி போலீசார் விசாரித்தனர். போலீசாரின் கேள்விகளுக்கு எஸ்.பி. வேலுமணி உடனுக்குடன் பதில் அளித்து விசாரணைக்கு ஒத்துழைத்தார்.

எஸ்.பி. வேலுமணி வீட்டில் இன்று சோதனையில் ஈடுபட்ட போலீசார் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்தனர். சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம், தென்காசி பகுதியில் வந்திருந்த அவர்கள் தனித்தனியாக குழுக்களாக பிரிக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com