கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தமிழக காங்கிரஸ் தயார்- செல்வப்பெருந்தகை

குஜராத் கடற்பகுதியில் அதிகமான அளவில் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.இந்தியாவில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் போதைப் பொருளால் பாழடைவதற்கு பா.ஜ.க. தான் காரணம்.
கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தமிழக காங்கிரஸ் தயார்- செல்வப்பெருந்தகை
Published on

சென்னை:

சென்னை தேனாம் பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது :-

ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள போதைப் பொருள் மாயமாகி இருக்கிறது. இதுகுறித்து உள்துறை அமைச்சகம் 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாட்டில் உள்ள பாஜக தலைவர்களும் ஏன் வாய் திறக்கவில்லை.

குஜராத் கடற்பகுதியில் அதிகமான அளவில் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் போதைப் பொருளால் பாழடைவதற்கு பா.ஜ.க. தான் காரணம். தமிழ்நாட்டில் உள்ள ஒருவர் போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டதை மட்டும் பேசும் பா.ஜ.க. இதுகுறித்தும் பேசவேண்டும்.

காவிரி விவகாரத்தை அரசியலுக்காக கர்நாடக காங்கிரஸ் பேசி வருகிறது. கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நாங்கள் போராட தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, காமராஜர் அரங்கத்தின் முகப்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பொருளாளர் ரூபி மனோகரன், துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, மாவட்ட தலைவர்கள் சிவ ராஜசேகரன், எம்.ஏ.முத்தழகன், எம்.எஸ்.திரவியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com