மகாவிஷ்ணு மீது 3 இடங்களில் புகார்... மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள் சமூக நீதி இயக்கத்தின் மாநில தலைவர் சரவணன், மகாவிஷ்ணு மீது புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டிசம்பர்-3 இயக்கத்தின் தலைவர் தீபக் புகார் அளித்துள்ளார்.
மகாவிஷ்ணு மீது 3 இடங்களில் புகார்... மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Published on

அரசு பள்ளிகளில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ள சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் திருவொற்றியூர் போலீஸ் நிலையம் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் ஆகிய 2 இடங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் சமூக நீதி இயக்கத்தின் மாநில தலைவர் சரவணன், மகாவிஷ்ணு மீது புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் டிசம்பர்-3 இயக்கத்தின் தலைவர் தீபக் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் மனுக்களில், மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சட்டப்படி மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com