தமிழகம் வந்தார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி வருகையையொட்டி 4500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மத்திய சிறப்பு பாதுகாப்பு படை குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் வந்தார் பிரதமர் மோடி
Published on

சூலூர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழாவின் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார்.

இதற்காக அவர் கேரளாவில் இருந்து விமானம் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தார். பின்னர் சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாதப்பூருக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி 4500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மத்திய சிறப்பு பாதுகாப்பு படை குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com