கோவையில் 52 இடங்களில் 4-ம் கட்ட ஆய்வு இன்று தொடங்கியது - 1,560 பேரிடம் மாதிரிகள் சேகரிப்பு

கோவையில் பொதுமக்களிடையே கொரோனா தொற்று எதிர்ப்பாற்றல் குறித்து கண்டறியும் 4-ம் கட்ட ஆய்வு இன்று தொடங்கியது.
1,560 பேரிடம் மாதிரிகள் சேகரிப்பு
1,560 பேரிடம் மாதிரிகள் சேகரிப்பு
Published on

கோவை:

தமிழகத்தில் பொதுமக்களிடையே கொரோனா தொற்றுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் குறித்து சுகாதாரத்துறை சார்பில் குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மாவட்டம் வாரியாக குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்டவர்களிடம் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கோவையில் பொதுமக்களிடையே கொரோனா தொற்று எதிர்ப்பாற்றல் குறித்து கண்டறியும் 4-ம் கட்ட ஆய்வு இன்று தொடங்கியது. கோவை மாவட்டம் முழுவதும் மொத்தம் 52 இடங்களில் 1,560 பேரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மாதிரிகள் சேகரிக்கப் படுகிறது. இன்று தொடங்கிய ஆய்வு வருகிற வெள்ளிக் கிழமை வரை நடக்கிறது. அதன்பின்னர் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் கிளியா மெஷின் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, மாநில சுகாதாரத்துறைக்கு அதன் முடிவுகளின் விவரங்கள் அளிக்கப்பட உள்ளது.

கோவை மாவட்டத்தில் ஏற்கனவே 3 கட்ட ஆய்வுகள் முடிந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக புதிய கிளாஸ்டர்கள் உருவாகியுள்ளன. இதனால் இன்று தொடங்கியுள்ள ஆய்வில் கூடுதலாக 10 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இன்று முதல் 31-ந் தேதி வரை மொத்தம் 52 இடங்களில் நடக்க கூடிய ஆய்வில் 1,560 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சோதனை செய்யப்பட உள்ளது.

கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் முதல் கட்ட ஆய்வில் 22.5 சதவீதம் பேருக்கும், 2-ம் கட்ட ஆய்வில் 20 சதவீதம் பேருக்கு 3-வது கட்ட ஆய்வில் 44 சதவீதம் பேருக்கு கொரோனா நோய் தொற்று எதிர்ப்பாற்றல் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com