முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக கலெக்டர்களுடன் ஆலோசனை

ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் தங்கள் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிலை குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.சிறந்த கலெக்டர்களை தேர்வு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடயம் வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக கலெக்டர்களுடன் ஆலோசனை
Published on

சென்னை:

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள 10-வது மாடி கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, போதைப் பொருட்கள் ஒழிப்பு, அரசு திட்டங்கள் மக்களிடம் சென்றடைவதில் உள்ள சுணக்கத்தை போக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். வனத்துறை அதிகாரிகள், கலெக்டர்கள் அடங்கிய கூட்டமும் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய கூட்டு கூட்டமும் நேற்று நடத்தப்பட்டது.

இந்த மாநாடு 2-வது நாளாக இன்றும் நடைபெற்றது. இன்றைய மாநாட்டில் மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் தங்கள் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிலை குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

இன்று மாலை வரை இந்த மாநாட்டில் சிறந்த கலெக்டர்களை தேர்வு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடயம் வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com