ஸ்டான்லி மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன்

குழந்தைகள் உள்பட யாருக்கும் தீவிர பாதிப்பு இல்லை. பெரியகுப்பம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மருத்துவ முகாமும் நடைபெற்று கொண்டிருக்கிறது.
ஸ்டான்லி மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன்
Published on

சென்னை:

சென்னை எண்ணூர் கோரமண்டல் உர ஆலையில் இருந்து வெளியேறிய அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

* எண்ணூரில் இரவு ஏற்பட்ட வாயு கசிவால் கண்ணெரிச்சல் உள்ளிட்ட உபாதைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 பேர் நலமுடன் உள்ளனர், விரைவில் வீடு திரும்புவர்.

* குழந்தைகள் உள்பட யாருக்கும் தீவிர பாதிப்பு இல்லை. யாரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படவில்லை.

* பெரியகுப்பம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மருத்துவ முகாமும் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com