மிச்சாங் புயல் பாதிப்பு- ஒரு மாத சம்பளத்தை வழங்கிய தி.மு.க. எம்.பி.க்கள்

அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தொழில் அதிபர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் நிதி வழங்கி வருகின்றனர்.
மிச்சாங் புயல் பாதிப்பு- ஒரு மாத சம்பளத்தை வழங்கிய தி.மு.க. எம்.பி.க்கள்
Published on

சென்னை:

மிச்சாங் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு என் ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார். மேலும் அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தொழில் அதிபர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் நிதி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தி.மு.க. எம்.பி.க்கள் சந்தித்தனர். அப்போது முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 30 தி.மு.க. மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகைக்கான காசோலையே வழங்கினார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com