டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை ரூ.10 உயருகிறது

பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில் வருவாயை பெருக்குவதற்கு டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.விலை உயர்வை பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடைமுறைப்படுத்துவதா? அல்லது தேர்தலுக்கு பிறகு நடைமுறைப்படுத்துவதா? என்பதை அரசு முடிவு செய்து அறிவிக்கும்.
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை ரூ.10 உயருகிறது
Published on

சென்னை:

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை விரைவில் குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயரும் என தெரிகிறது.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இப்போது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் பஸ் நிலையம், ரெயில் நிலையம், பள்ளிக்கூடங்கள் அருகேயும் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்னும் இயங்கி கொண்டுதான் இருக்கிறது. இப்போது மொத்தம் 4829 மதுக்கடைகள் செயல்படுகிறது.

அரசுக்கு பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில் வருவாயை பெருக்குவதற்கு டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

அதன்படி பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட மதுவகைகளின் விலை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் விரைவில் உயர உள்ளது. இதற்கேற்ப 'ஆப்' பாட்டில், முழு பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயர வாய்ப்புள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மூலப்பொருட்களின் விலை உயர்வால் மதுபானங்களின் விலையை உயர்த்த வேண்டும் என்று மதுபான ஆலை உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். அரசுக்கும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மது வகைகள் விலைகள் குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் என்ற அளவில் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடைமுறைப்படுத்துவதா? அல்லது தேர்தலுக்கு பிறகு நடைமுறைப்படுத்துவதா? என்பதை அரசு முடிவு செய்து அறிவிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com