தமிழக மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு- ஒருவர் படுகாயம்

படகில் இருந்த மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர் படுகாயம் அடைந்துள்ளார்.படுகாயமடைந்த மீனவரை கடற்படையினரே மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தமிழக மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு- ஒருவர் படுகாயம்
Published on

தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

படகை நிறுத்துமாறு கூறிய போது, நிறுத்தாமல் சென்றதால் சந்தேகமடைந்த கடற்படையினர் படகை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்.

இதில், படகில் இருந்த மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர் படுகாயம் அடைந்துள்ளார்.

படுகாயமடைந்த மீனவரை கடற்படையினரே மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com