கனமழை காரணமாக 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
கனமழை காரணமாக 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Published on

வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதன் எதிரொலியால், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து, தேனி மாவட்டத்திலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com