அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக அலுவலகம் ஒபிஎஸ் வரவுள்ளதால் கூட்டம் அவசரமாக முடிக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
Published on

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் செல்வதாக தகவல் வெளியானது.

அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் அதிமுக அலுவலகம் ஒபிஎஸ் வரவுள்ளதால் கூட்டம் அவசரமாக முடிக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.

இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி ஜூன் 23-ம் தேதி நடைபெறும். ஒற்றைத் தலைமை விவகாரம் செயல் வடிவம் பெறுமா என்பது குறித்து விரைவில் தெரியவரும். கட்சியில் எந்த முடிவாக இருந்தாலும ஒருமித்த கருத்துடன் எடுக்கப்படும்.

அதேபோல், ஓபிஎஸ் கட்சி அலுவலகம் வருகைக்கும், அதிமுக தீர்மான குழு கூட்டம் நிறைவுக்கும் சம்பந்தமில்லை. அதிமுக தீர்மானக் குழு கூட்டம் ஜூன் 18-ம் தேதி மீண்டும் நடைபெறும்.

பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com