மயிலாப்பூர் சாய்பாபா கோயிலில் தீ விபத்து

மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோயிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. கோயிலில் வைக்கப்பட்ட ஓலைகளில் தீப்பொறி விழுந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம்.
மயிலாப்பூர் சாய்பாபா கோயிலில் தீ விபத்து
Published on

சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள சாய்பாபா கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. கோயிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை அடுத்து, கோயிலை சுற்றி ஓலைகள் கட்டப்பட்டு இருந்தது. ஓலையில் தீப்பொறி பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தீ விபத்து ஏற்பட்டு இருப்பதை அடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கோயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com