தி.மு.க. தேர்தல் பிரசார கூட்டம்- காஞ்சிபுரத்தில் நாளை 2 அமைச்சர்கள் பேசுகிறார்கள்

செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.காஞ்சிபுரம் மாநகர செயலாளர் சி.கே.வி. தமிழ்ச்செல்வன் வரவேற்று பேசுகிறார்.
தி.மு.க. தேர்தல் பிரசார கூட்டம்- காஞ்சிபுரத்தில் நாளை 2 அமைச்சர்கள் பேசுகிறார்கள்
Published on

சென்னை:

காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி சார்பாக, "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" என்ற தலைப்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியளவில் காஞ்சிபுரம் காந்தி ரோடு, தேரடி அருகில், மாபெரும் தேர்தல் பிரசார கூட்டம் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் தலைமையில் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாநகர செயலாளர் சி.கே.வி. தமிழ்ச்செல்வன் வரவேற்று பேசுகிறார்.

இக்கூட்டத்தில், எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com