மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 11 பேருக்கு கொரோனா உறுதி

கொரோனா தொற்று உறுதியான நிலையில் 11 மருத்துவ மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.மொத்தம் 277 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 11 பேருக்கு கொரோனா உறுதி
Published on

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இதையடுத்து, முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் பொது மக்களுக்கு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்,  சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11 மருத்துவ மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மொத்தம் 277 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்ட நிலையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com