சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடத்த அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும்- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியதற்கு பாராட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி.சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த தமிழ்நாட்டிற்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று உங்கள் ஆதரவை கோருகிறேன்.
சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடத்த அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும்- பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
Published on

சென்னை:

"44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்களும், அரசும் மிகச் சிறப்பாக நடத்தி உள்ளார்கள். உலகெங்கிலும் இருந்து இந்த போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று, நமது மகத்தான கலாச்சாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள்" என பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளப்பதிவு மூலம் தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, தங்களது கனிவுமிகு பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

விருந்தோம்பலும் தன்மானமும் தமிழர்களின் இணைபிரியா இருபெரும் பண்புகள் ஆகும்!

தொடர்ச்சியான உங்களது ஆதரவையும், இதுபோல இன்னும் பல உலக அளவிலான போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளையும் தமிழ்நாட்டுக்கு வழங்குமாறு தங்களைக் கோருகிறேன்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com