தமிழக நீர்வளத்துறைக்கு ரூ.9,264 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் மரிய வில்சன்

கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த வலியுறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Budget for Water Allocation - Minister Marie Wilson
Tamil Nadu Budget Water Allocation: ₹9,264 crore for water resources and river restoration projects
Published on

நிதிநிலை அறிக்கை 2026

2026-27 நிதியாண்டிற்கான தமிழக நிதி நிலை அறிக்கை இன்று தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் கீழ், நிதித்துறை அமைச்சர் என். மரிய வில்சன்-ஆல் சமர்ப்பிக்கப்பட்டது.

காலை 10 மணிக்கு இந்த நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் மரிய வில்சன், தனக்கு அனைத்தும் கொடுத்த மக்களுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் அரசியலுக்கு வந்துள்ளதாக கூறினார்.

மேலும் அவர், பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம், ஆனால் செய்யும் செயலில் தான் அவர்கள் சிறப்பு இயல்புகள் வேறுபடுகின்றன எனவும் கூறினார்.

நீர்வளத்துறை பட்ஜெட் ஒதுக்கீடு

இதையடுத்து அமைச்சர் தாக்கல் செய்த பெட்ஜெட்டில், நதிகள் மீட்பு குறித்தும் தாமிரபரணி, வைகை மற்றும் காவிரி மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கான சாத்தியக் கூறு ஆய்வுக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக நீர்வளத்துறைக்கு ரூ.9,264 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த வலியுறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து காவிரி மற்றும் கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிக்கை வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com