ஆகஸ்ட் 30 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.
rains
Published on

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 35 முதல் 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com