தமிழ்நாட்டின் நிதி நிலை என்ன? - இன்று மாலை வெள்ளை அறிக்கை வெளியீடு!

நாளை மறுநாள் சட்டமன்றம் கூட உள்ள நிலையில் இன்று வெள்ளை அறிக்கை வெளியீடு.
Tamil Nadu Finance White Paper
Published on

தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் இன்று வெளியிடுகிறார். சென்னை தலைமை செயலகத்தில் மாலை 5.30 மணிக்கு அமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார்.

நாளை மறுநாள் சட்டசபை கூட உள்ள நிலையில் இன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளது. தமிழ்நாட்டின் நிதி வருவாய் மற்றும் கடன் குறித்து அறிக்கையில் தகவல் வெளியாகும்.

முன்னதாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றபோது நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என கூறியிருந்த நிலையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com