கோடை மழையால் குளிர்ந்த தமிழ்நாடு: அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 103 டிகிரி வெப்பம் பதிவு

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது.இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.
கோடை மழையால் குளிர்ந்த தமிழ்நாடு: அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 103 டிகிரி வெப்பம் பதிவு
Published on

தமிழகம் முழுவதும் இன்று 4 இடங்களில் வெயில் சதம் அடித்தது. தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 103 டிகிரி வெயில் கொளுத்தியது.

இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:-

திருத்தணி 102, ஈரோடு 101, கரூர் 100, திருப்பத்தூர் 99, தருமபுரி 99, மதுரை 98, சென்னை 98 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-

கொடைக்கானல் 68, ஊட்டி 72, குன்னூர் 73, வால்பாறை 80 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com