அரசுப் பள்ளிகளில் 2025- 26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நாளை தொடக்கம்

கோடை விடுமுறைக்கு முன்பே தொடக்கப்பள்ளிகளில் 60,000 மாணவர்கள் சேர்ந்தனர்.அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பெற்றோர்களிடையே ஏற்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுரை.
அரசுப் பள்ளிகளில் 2025- 26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நாளை தொடக்கம்
Published on

அரசுப் பள்ளிகளில் 2025-26ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை நாளை தொடங்குகிறது.

அங்கன்வாடி மையத்தில் முன்பருவக் கல்வி முடிந்த குழந்தைகளில் ஒருவரைக் கூட விடாமல், அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டும் தனியார் பள்ளிகளைப் போல மார்ச் முதலே மாணவர் சேர்க்கையை தொடங்கியதால், கோடை விடுமுறைக்கு முன்பே தொடக்கப்பள்ளிகளில் 60,000 மாணவர்கள் சேர்ந்தனர்.

அதிக மாணவர் சேர்க்கையை உறுதி செய்வதற்காக, கல்வித் துறையில் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பெற்றோர்களிடையே ஏற்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com