கோவை வந்தே பாரத் உட்பட பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சேவையில் மாற்றம் : தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5.55 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் 16089 வருகிற 27-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது.
ரெயில்
Published on

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரக்கோணம் பணிமனையில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 6.30, மதியம் 2.25, 4.35 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16057, 16053, 16203) வருகிற 26 மற்றும் 28-ந் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில் திருப்பதியில் இருந்து காலை 10.10, 6.05, மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16054) ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5.55 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் 16089 வருகிற 27-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது. அதே போல, ஜோலார்பேட்டையில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் 16090 வருகிற 28-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது.

எழும்பூரில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு சேலம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் 22153 வருகிற 27-ந் தேதி எழும்பூருக்கு பதிலாக செங்கல்பட்டில் இருந்து இரவு 12.50 மணிக்கு புறப்படும். அதே போல சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் வந்தே பாரத் ரெயில் 20643 வருகிற 19 மற்றும் 26-ந் தேதிகளில் 30 நிமிடம் தாமதாக சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும். இதே ரெயில், வருகிற 20,21,22,23,25,27,28 ஆகிய தேதிகளில் 45 நிமிடம் தாமதமாக சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும்.

சென்னை சென்ட்ரல்-மும்பை, திருவனந்தபுரம், பெங்களூரு-சென்னை சென்ட்ரல், மங்களூரு-சென்னை சென்ட்ரல், மைசூரு-சென்னை சென்ட்ரல், அகமதாபாத்-சென்னை சென்ட்ரல் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com