காச்சிக்குடா-செங்கல்பட்டு எக்ஸ்பிரஸ் ரெயில் திருவள்ளூரில் நின்று செல்லும்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

காச்சிக்குடாவில் இருந்து வருகிற 25-ந்தேதி வரையில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், தற்காலிகமாக திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
ரெயில்
Published on

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரக்கோணம் பணிமனையில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக சில எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* தெலுங்கானா மாநிலம் காச்சிக்குடாவில் இருந்து வருகிற 25-ந்தேதி வரையில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.17652), தற்காலிகமாக திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

* காச்சிக்குடாவில் இருந்து வருகிற 25-ந்தேதி வரையில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (17653), தற்காலிகமாக திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

* திருப்பதியில் இருந்து வருகிற 26-ந்தேதி வரையில் அதிகாலை 4.10 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16111), திருத்தணி, அரக்கோணம் வடக்கு கேபின், மேல்பாக்கம், திருமால்பூர் ஆகிய மாற்றுபாதை வழியாக புதுச்சேரி செல்லும். அரக்கோணம் ரெயில் நிலையம் செல்லாது. மறுமார்க்கமாக, புதுச்சேரியில் இருந்து வருகிற 26-ந்தேதி வரையில் மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16112), மேற்கண்ட வழித்தடம் வழியாக திருப்பதி செல்லும். அரக்கோணம் செல்லாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com