

பெண்களின் பாதுகாப்புக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் நாளை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் நாளை மாலை 5 மணிக்கு சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்ட தொக்க விழா நடைபெறுகிறது.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டத்தை நாளை தொடங்கி வைத்து முதலமைச்சர் விஜய் உரையாற்ற உள்ளார்.
தமிழ்நாட்டு சட்டம் ஒழுங்கு டிஜிபி மகேஷ் குமார் அகர்வாலும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை தொக்க விழாவில் பங்கேற்க உள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த, புதிதாக அமைந்துள்ள தவெக அரசால் உருவாக்கப்பட்ட சிறப்பு காவல் படைத்திட்டம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை.
இந்தத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் கடந்த மே 29ம் தேதி தொடங்கி வைக்க இருந்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டது.
மைதானத்தில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.