புதுக்கோட்டையில் பிரபல ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் என்கவுன்ட்டர்.போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது என்கவுன்ட்டர்.
புதுக்கோட்டையில் பிரபல ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை
Published on

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பகுதியில் திருச்சி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பிரபல ரவுடி துரைசாமி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

துரைசாமி மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளது.

துரைசாமி, போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

வம்பன் காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த ரவுடியை பிடிக்கச் சென்றபோது சம்பவம் நடந்துள்ளது.

ஏற்கனவே ஒரு முறை ரவுடி துரையை போலீசார் துப்பாக்கியில் சுட்டுப்பிடித்துள்ளனர்.

ரவுடி துரை என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரில் ஆய்வு செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com