

கோவையில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தன்னை யாரோ மிரட்டுவதாக அமைச்சர் சொல்கிறார். மிரட்டல் இருப்பதாக அமைச்சரே சொல்கிறார் என்றால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை என்ன?
* அமைச்சருக்கே பாதுகாப்பற்ற சூழல் எனில் சாமானிய மக்கள் பாதுகாப்பின் நிலை என்ன?
* மின் விநியோகத்தை சீராக்குவதற்கு ஒரு ஆய்வுக்கூட்டத்தைக் கூட நடத்தவில்லையே... ஏன்?
* முறையான ஆய்வுக் கூட்டம் நடத்தி மின்வெட்டுக்கான தீர்வு காண வேண்டும்.
* மின்துறை சார்ந்த டெண்டர்களுக்காக 3 குழுக்கள் இருக்கின்றன.
* மின்சாரத்துறை சார்ந்த டெண்டர்களில் யாரும் முறைகேடு செய்து விட முடியாது.
* உயர்மட்ட அதிகாரிகளை மட்டுமே சந்திக்கும் அமைச்சர், அடுத்த கட்ட ஊழியர்களை சந்திப்பதில்லை.
* துறை சார்ந்த நிர்வாகத் திறன் இன்றி அரைகுறையாக இருக்கின்றனர்.
* சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் துறை குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளாமல் ஆராயாமல் பேசுகின்றனர்.
* நாங்கள் ஆட்சிக்கு வந்தபோதே மின்வாரியம் ஒன்றரை லட்சம் கோடி கடனில் இருந்தது.
* ஹார்டு டிஸ்க் திருட்டு என்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? என்றார்