செந்தில் பாலாஜி காவல் 39வது முறையாக நீட்டிப்பு

சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதாகி ஓராண்டு நிறைவு.
செந்தில் பாலாஜி காவல் 39வது முறையாக நீட்டிப்பு
Published on

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதானார். இதன்பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39வது முறையாக நீட்டிக்கப்பட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலை ஜூன் 19ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதாகி ஓராண்டாகியுள்ள நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com