ரூ.4 கோடி பறிமுதல்- சிபிசிஐடி வசம் ஆவணங்கள் ஒப்படைப்பு

சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் ஆவணங்கள் ஒப்படைப்பு.கைது செய்யப்பட்டவர்களின் 4 செல்போன்களும் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு.
ரூ.4 கோடி பறிமுதல்- சிபிசிஐடி வசம் ஆவணங்கள் ஒப்படைப்பு
Published on

சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில், ஆவணங்களை தாம்பரம் போலீசார் ஒப்படைத்தனர்.

சிபிசிஐடி டிஎஸ்பி சசிதரன் முன்னிலையில், விசாரணை அதிகாரியான சிபிசிஐடி காவல் ஆய்வாளர் லோகநாதனிடம் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தாம்பரம் போலீசார் இதுவரை 15 பேரிடம் விசாரணை நடத்தி, 350 பக்க விசாரணை அறிக்கையை தயார் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

350 பக்க விசாரணை அறிக்கையை தாம்பரம் காவல் ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம், சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்களின் 4 செல்போன்களும் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com