

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
* நான் திமுக அடிமை.. திமுக பரம்பரை.. என பெருமை பேசுகிறார்கள். திமுக அடிமை எனக்கூறுவதில் என்ன பெருமை.
* மக்களை ஏமாற்றி விட்டு நல்லாட்சி தருவதாகக் கூறுகிறார்கள்.
* கத்தியில் இருந்த கோழி ரத்தத்தை சுவைப்பதாக நினைத்து தனது ரத்தத்தைக் குடிக்கும் ஓநாய்கள்.
* காசு கொடுக்காமலே நாம் தமிழர் பிரசாரத்திற்கும் கூட்டம் வரும். அதுதான் புரட்சி.
இவ்வாறு அவர் கூறினார்.