ராஜீவ் காந்தியை அவதூறாக பேசிய வழக்கு- கோர்ட்டில் சீமான் ஆஜர்

சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இழிவுபடுத்தி பேசியதாக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு தொடரப்பட்டது.விக்கிரவாண்டி உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கோர்ட்டில் ஆஜர் ஆக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் வந்த காட்சி.
கோர்ட்டில் ஆஜர் ஆக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் வந்த காட்சி.
Published on

விக்கிரவாண்டி:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் விக்கிரவாண்டி கோர்ட்டில் சீமான் இன்று ஆஜரானார்.

கடந்த 2019-ம்ஆண்டு விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர்போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட நேமூர் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இழிவுபடுத்தி பேசியதாக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு தொடரப்பட்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை தொடர்ந்து சீமான் நீதிமன்றத்தில் ஆஜரானார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com