அரசு முட்டை விற்பனை- கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்: கலெக்டர்

அரசு முட்டையை விற்றது யார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.துறையூரில் உள்ள உணவகத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அரசு முட்டை விற்பனை- கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்: கலெக்டர்
Published on

திருச்சி மாவட்டம் துறையூரில் அரசு சத்துணவு முட்டை கள்ள சந்தையில் அமோகமாக விற்பனையாகி வருகிறது. துறையூரில் உள்ள தனியார் உணவகத்தில் தமிழக அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் கூறுகையில்,

அரசு முட்டையை விற்றது யார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துறையூரில் உள்ள உணவகத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அரசு முட்டையை விற்றவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com