கரும்பு விவசாயிகளுக்கு ரூ.247 கோடி ஊக்கத்தொகை- தமிழக அரசு

சிறப்பு ஊக்கத்தொகையால் சுமார் 1.20 லட்சம் கரும்பு விவசாயிகள் பயன் அடைவார்கள்.2023-24 அரவை பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவுசெய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டுள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.247 கோடி ஊக்கத்தொகை- தமிழக அரசு
Published on

சென்னை:

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு ரூ.247 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு நிர்ணயித்துள்ள ரூ.2,919.75 யுடன் மாநில அரசின் ஊக்கத் தொகையான ரூ.215 சேர்த்து கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.3,134.75 கிடைக்கும்.

இந்த சிறப்பு ஊக்கத்தொகையால் சுமார் 1.20 லட்சம் கரும்பு விவசாயிகள் பயன் அடைவார்கள்.

2023-24 அரவை பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவுசெய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com